ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் எமி ஜாக்சன் நடிக்கும் ஐ படம் பற்றித்தான் படத்துறையில் இப்போது பரபரப்பு பேச்சு! அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் கலந்து கொள்கிறார்....ஐ படத்தின் தெலுங்கு பதிப்பின் இசையை ஜாக்கிசான் வெளியிடுகிறார் என்று தொடங்கி அடுத்தடுத்து வரும் தகவல்கள் புருவம் உயர்த்தி பிரமிக்க வைக்கின்றன.
முக்கியமாக...ஐ படத்தின் ரிலீஸ் பற்றி வெளியாகும் தகவல்கள்...! அதாவது, ஐ படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன், 20000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறாராம். அவற்றில் சீனாவில் மட்டும் 15000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம் ஐ படம். தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல இந்தியத்திரையுலகம் கண்டிராத வகையில் ஐ படத்தைப் பற்றிய அசத்தல் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் அதே நேரம், இன்னொரு தகவலும் அடிபடுகிறது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் ஐ படத்துக்காக போடப்பட்ட செட் மாதக்கணக்கில் பிரிக்காமல் அப்படியே கிடக்கிறது. காரணம்..அந்தப் பாடல்காட்சியில் நடிக்க வேண்டிய எமிஜாக்சன் கால்ஷீட் தர மறுத்ததுதான். கடந்த சில மாதங்களுக்கு முன் குறிப்பிட்ட அந்த செட்டில் படப்பிடிப்பு துவங்கியபோது கேரவானில் மேக்கப்போட்டுக் கொண்டிருந்தார் எமி. தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை அன்று தருவதாக சொன்ன தயாரிப்பாளர் தரவே இல்லை. கடுப்பான எமி, மேக்கப்பை கலைத்துவிட்டு நேராக ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அன்றிரவே லண்டனுக்கும் புறப்பட்டுப்போய்விட்டார். சம்பளத்தை செட்டில் பண்ணினால்தான் பாடல் காட்சியில் நடிக்க வருவேன் என்று சொல்லிவிட்டார். இந்த பிரச்சனையினால் பாடல் காட்சி படமாக்கப்படாமலே இருக்கிறது.