‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விராட் கோலியுடனான காதல், அனுஷ்காவின் திரையுலக வாழ்க்கைக்கே உலை வைத்து விடும் போலிருக்கிறது. 'இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் மண்ணை கவ்வியதற்கு, அனுஷ்காவும் ஒரு காரணம்' என, பாலிவுட்டில் வதந்தியை பரப்பி விட்டுள்ளனர். 'கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே, அனுஷ்காவுடன் ஊர் சுற்றியதால் தான், விராட் கோலி சரியாக விளையாடவில்லை' என்ற தகவலும் பரவியது. இதையடுத்து, 'கோலிக்கும், அனுஷ்காவுக்கும் திருமணம் நடக்கப் போகிறது. அனுஷ்கா, படங்களில் நடிப்பதில் இருந்து படிப்படியாக விலக போகிறார்' என, சக நடிகைகளே வதந்தியை பரப்ப, படு டென்ஷனாகி விட்டார், அனுஷ்கா. 'கோலியும், நானும் நண்பர்கள் தான். அதற்காக, அவரை திருமணம் செய்யும் ஐடியா எதுவும் இல்லை' என, தானாகவே ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார்.