'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல்ஹாசன், பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலா காதலா படத்தின் மூலம் சினிமா தயாரிப்பாளராக தமிழ்சினிமாவில் களம் இறங்கியவர் பி.எல்.தேனப்பன். ஸ்ரீ ராஜிலக்ஷ்மி பிலிம்ஸ் சார்பில் தொடர்ந்து பம்மல் கே சம்பந்தம், கனா கண்டேன், ப்ரியசகி, வல்லவன், துரை, அய்யனார் போன்ற படங்களை தயாரித்தார். தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு உப்பு கருவாடு என்று பெயர் வைத்துள்ளனர். மொழி, அபியும் நானும் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் தான் இப்படத்தை இயக்குகிறார். தற்போதைக்கு படத்தின் தலைப்பும், இயக்குநரும் மட்டுமே முடிவாகியுள்ளது இதில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்துள்ளார்.