Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத் வழி என் வழி ! - நடிகர் ஜெய்

28 ஆக, 2014 - 17:58 IST
எழுத்தின் அளவு:

சுற்றிலும் கார்கள் விர்ரென்று பறந்து ஓடும் இருங்காட்டுக் கோட்டையில் நடிகர் ஜெய்யைப் பார்ப்பவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பந்தைய காரிலிருந்து காற்றில் முடிகள் பறக்க இறங்கி வந்த ஜெய்யை அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள். இது நடிகர் ஜெய் தானா அல்லது அவர் போல இருக்கும் இன்னொருவரா என்று குழப்பம்.


அவர்களுக்கு அவர் நடிகர் ஜெய்தான். என்பது உறுதி ஆனதும் ஆச்சர்யம் தாங்கவில்லை. படங்களில் பெரும்பாலும் பயந்த சுபாவமுள்ள வேடங்களில் வரும் ஜெய், இப்படி கார் பந்தய வீரராக வந்து நின்றதை பார்த்தவர்களால் நம்பத்தான் முடியவில்லை.


ஆனால் ஜெய் சினிமாவில் " சென்னை - 28 " படத்தில் ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் அறிமுகம் ஆனார். ஜெய் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவரும் கூட, ஜெய்க்கு கார் பந்தய கனவு சிறு வயதிலிருந்தே உண்டு. 12 வயதிலிருந்து விரிந்த கனவு நடிகர் அஜித் கார்ப் பந்தய வீரராக பிரபலமானதும் வலுப்பட்டது. ''எனக்கு தூண்டுதலும் பெரிய நம்பிக்கையும் அஜித் சார்தான். அவர் கார் பந்தயங்களிலும் நடிப்பிலும் பேசப்பட்டு பிரபலமானவர்." என்கிறார் ஜெய்.


அண்மையில் இருகாட்டுக் கோட்டையில் நடந்த கார் பந்தயத்தில் 5 சுற்றுக்களில் தன் திறமையை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு சுற்றும் சுமார் 2 கீ.மீ கொண்டது. இவர் எல்லாம் கார் பந்தயத்துக்கு வந்தால் அஜீத் ஆக முடியுமா என்ற முனுமுனுப்பையும் எதிர் கொண்டவராகத் கூரும் ஜெய், அஜித் ஒரு லீடர், சிறந்த லீடர் மேலும் பல லீடர்களைத்தான் உருவாக்குவார்கள். பின்பற்றுவர்களை அல்ல. என்று நம்பும் ஜெய், பார்முலா பந்தயங்களுக்குத் தயாராகிறார். அதற்கு தகுதியான அனுவங்களையும் பயிற்சிகளையும் பெற வேண்டும்.நுட்பங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அடக்கமாக.


அஜித்தை போலவே நடிப்பிலும் ரேஸிலும் கவனம் செலுத்த விரும்புகிறார் ஜெய். ஜெய் நடித்த படங்கள் ஓடவும் பந்தயத்தில் இவர் கார் ஓடவும் வாழ்த்தலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in