'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1980களில் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மேனகா. மலையாளத்தில் 80 படங்களுக்கு மேல் நடித்தவர் தமிழில் நெற்றிக் கண் உள்பட சில படங்களில் நடித்தார். இவரது மகள் கீர்த்தி சுரேஷ், தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி கடந்த ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். ரிங் மாஸ்டர் படத்திலும் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள துர்போனி, ரெண்டு ஜெல்லா சீத்தா ஆகிய படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ் படங்களில் கால் பதிக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கிறார். நெடுஞ்சாலை கிருஷ்ணா இயக்கும் மானே தேனே பேயே படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. அம்மா மேனகாவால் அப்போதிருந்த அம்பிகா, ராதாவுக்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. மகள் கீர்த்தி கார்த்திகா, துளசியை மிஞ்சுவாரா என்று போக போகத்தான் தெரியும்.