ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள 'ஐஸ் க்ரீம் 2' படத்தின் புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் தெலுங்கு மீடியாக்களுக்கு வழங்கப்பட்டன. அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் நமக்கும் கிடைத்தது. அதைப் பார்த்ததுமே அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் மூழ்கிப் போனோம். சமீப காலத்தில் தென்னிந்தியத் திரையுலகில் ஒரு நடிகை இப்படி நடித்ததே இல்லை என்ற அளவிற்கு படு ஆபாசமாக நடித்திருக்கிறார் அந்தப் படத்தின் நாயகியான நவீனா என்கிற மிருதுளா.
தமிழில் 'வல்லினம், மறுமுனை' ஆகிய படங்களில் நடித்தவர்தான் மிருதுளா. தெலுங்குத் திரையுலகத்திற்கென தனது பெயரை நவீனா என்று மாற்றிக் கொண்டார். பெயரில் நவீனா என்று இருப்பதாலோ என்னமோ இப்படி அதி நவீனமாக நடித்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. கடந்த சில வாரங்களாகவே தெலுங்கு மீடியாக்களில் யார் இந்த நவீனா என்று பரபரப்பாக செய்திகள் வெளியாகின. காரணம் அவர் வெளியிட்ட சில படு கவர்ச்சியான புகைப்படங்கள். ராம்கோபால் வர்மா அவருடைய படங்களில் நடிகைகளை எப்போதுமே மிகவும் கவர்ச்சியாகக் காட்டுவது வழக்கம். 'ரங்கீலா' ஊர்மிளாவிலிருந்து , 'ஐஸ் க்ரீம் 2' நவீனா வரை அதைத் தொடர்ந்து வருகிறார்.
இதற்கு முன் வெளியான 'ஐஸ் க்ரீம்' படத்திலும் அப்படத்தின் நாயகியை மிகவும் கவர்ச்சியாக நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இப்போது 'ஐஸ் க்ரீம் 2' படத்தின் புகைப்படங்களைப் பார்த்தே அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், இன்னும் படம் வந்தால் எப்படி அதிர்ச்சியடைவார்களோ தெரியவில்லை.