பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தூம், தூம்-2 படங்களின் வரிசையில், அமீர்கான் நடிப்பில் இந்தாண்டு வெளியான படம் தூம்-3. இப்படத்தில் அமீர்கான் ஹீரோ ரோல் ஏற்றிருந்தார். கத்ரீனா கைப் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர்களுடன் அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது.
இந்நிலையில் இப்படம் டோக்கியோ திரைப்பட விழாவிற்கு செல்கிறது. அக்டோபர் மாதம் ஜப்பானின், டோக்கியோ நகரில் நடக்கும் டோக்கியோ திரைப்பட விழாவில் தூம்-3 படமும் திரையிடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக அமீர்கான் டோக்கியோ செல்ல இருக்கிறார். கூடவே தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து சென்று அங்கேயே, இந்தாண்டு தனது மனைவியின் பிறந்தநாளையும் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்.
தற்போது அமீர்கான், சர்ச்சையை ஏற்படுத்திய நிர்வாண போஸ்டரான பி.கே. படத்தில் நடித்து வருகிறார். கூடவே ரியாலிட்டி ஷோவான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியிலும் பிஸியாக இருக்கிறார்.