இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான், சினிமாவை போலவே விளம்பரங்களிலும் பிஸியானவர். அவர் நடித்த தம்ஸ்-அப் உள்ளிட்ட பல விளம்பரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் பிரிட்டாணியா டைகர் பிஸ்கட் விளம்பரத்தில் முன்னர் நடித்தார். இரண்டு ஆண்டுகள் அந்த ஒப்பந்தம் நீடித்தது, தற்போது அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மும்பையில் இந்த விளம்பரத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது. இதில் சல்மான் கான், குழந்தைகளுடன் நடித்துள்ளார். டைகர் பிஸ்கட்டை சாப்பிட்டபடியும், குழந்தை, சல்மான் கானுக்கு நடன டிப்ஸ் கொடுத்தபடியும் அந்த விளம்பரம் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த விளம்பரம் வெளியாக இருக்கிறது.