ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் | மீண்டும் தமிழுக்கு வரும் சமந்தா |
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து மேரி கோம் என்ற படம் உருவாகியுள்ளது. ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படத்தில், மேரி கோமாக ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இப்படம் வருகிற செப் 5ம் தேதி ரிலீஸாகிறது. அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட படக்குழு படத்தின் புரொமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், முதன்முறையாக ஒரு ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டில் தான் நடித்துள்ளதால், இந்தப்படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டுள்ள ப்ரியங்கா, இப்படத்தை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளார். இதனிடையே தொடர்ந்து ஹீரோயினை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாக ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, பாலிவுட்டில் இன்னும் பெண்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. கஹானி, நோ ஒன் கில்டு ஜெசிகா, குயின் போன்ற சில படங்களுக்கு மட்டுமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாக்ஸிங் வீராங்கனை மேரி கோமை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள், எல்லோரும் என்னிடம் தொடர்ந்து பெண்கள் தொடர்பான படங்களில் நடிக்க சொல்லி கேட்கின்றனர். ஆனால், அதேமக்கள் தான், 'கிக்' போன்ற ஹீரோ தொடர்பான படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.