ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
தூய தமிழில் பெயர் வைப்பதைப்போலவே ஒரு எழுத்தில் பெயர் வைப்பதும் இப்போது பேஷன். ஐஸ்வர்யா தனுஷ் தன் படத்திற்கு 3 என்று பெயர் வைத்தார். ஷாம் தன் படத்திற்கு 6 என்று பெயர் வைத்தார். உ, க என்ற பெயர்களில் படம் வெளியானது. ம, பா, ழ ஆகிய பெயர்களிலும் படங்கள் தயாராகி வருகிறது. ஷங்கர் தன் படத்திற்கு ஐ என்று பெயர் வைத்திருக்கிறார்.
தற்போது ரு என்ற ஒரு எழுத்தில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் சுண்டாட்டம், எதிர்வீச்சு படங்களில் நடித்த இர்பான் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் ரக்ஷிதா ஹீரோயினாக நடிக்கிறார். சதாசிவம் என்பவர் இயக்குகிறார். அவர் ரு பற்றி கூறியதாவது:
"ரு என்றால் தமிழில் 5 என்ற எண்ணை குறிக்கும். படத்தில் 5 வில்லன்கள் அதுதான் ரு என்று வைத்திருக்கிறோம் (அடடா... என்ன ஒரு பொருத்தம்). சமூகத்திற்கு தீங்கு செய்யும் 5 வில்லன்களையும் ஹீரோ 5 விதமாக அழிப்பதுதான் கதை. ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் எல்லாமே படத்தில் இருக்கு. கோவா, குஜராத், பெங்களூரு பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது" என்கிறார் இயக்குனர் சதாசிவம்.