பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
மலையாளத்தில் மோகன்லால் நடித்து, சூப்பர்ஹிட்டான த்ரிஷ்யம், தற்போது தமிழில் படமாக்கப்பட்டு வருகிறது. த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
பாபநாசம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கமல் நடிக்கிறார். இப்படத்தில் கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் படப்பிடிப்புக்கள் நெல்லை மாவட்டத்தின் தென்காசி, சிவராமப்பேட்டை, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.
பாபநாசம் படத்தில் கமல், அரசு பஸ்சில் பயணம் செய்வது போன்ற காட்சி நேற்று படமாக்கப்பட்டது. இதற்காக அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து ஒரு பஸ் வாடகைக்கு எடுக்கப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தென்காசி பஸ் ஸ்டாண்டில் இருந்து குத்துக்கல்வலசை சந்திப்பு வரை கமல் பஸ்சில் சென்றார். அப்போது கமலை பார்க்க அவரது ரசிகர்கள் படப்பிடிப்பு நடந்த இடத்தில் திரண்டனர். இதனால் படப்பிடிப்பு நடந்த தென்காசி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.