Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் 'ஐ' ரிலீஸ்...?

26 ஆக, 2014 - 14:47 IST
எழுத்தின் அளவு:

சொன்னால் நம்புவீர்களா என்பதே சந்தேகம்தான்...ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள 'ஐ' திரைப்படம் தீபாவளி நாளான அக்டோபர் 22ம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள 20000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். அதில் சீனாவில் மட்டும் 15000 திரையரங்குகளில் வெளியாகப் போகிறதாம்.


இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஜப்பானிஸ், தைவானிஸ், மான்டரின் என பல மொழிகளில் வெளியிட உள்ளார்களாம். அப்படி நடக்கும் பட்சத்தில் ஒரு இந்தியத் திரைப்படம் உலகம் முழுவதும் அவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாக இருக்கும். சுமார் 3 ஆண்டு காலமாக இப்படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வருகிறார். படத்திற்காக விக்ரம் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அதற்கு மேல் இளைத்தால் உயிருக்கே ஆபத்து என டாக்டர்கள் சொல்லுமளவிற்கு உடலை மிக ஒல்லியாக இளைக்க வைத்து நடித்திருக்கிறாராம் விக்ரம்.


தெலுங்கில் 'மனோகரடு' என்ற பெயரிலும் இப்படம் வெளியாக உள்ளது. ஷங்கர் இதுவரை இயக்கிய படங்களை விட இந்தப் படத்தில் இருக்கும் பிரம்மாண்டம் இதுவரை தமிழ்த் திரையுலகம் கண்டிருக்காத அளவிற்கு உள்ளதாம். ஒவ்வொரு பாடல் காட்சியையும் ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்களாம். ஏ.ஆர்.ரகுமான் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளதாம். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக என்று இதுவரை பல படங்கள் சொல்லப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் படம் உண்மையிலேயே ஆங்கிலப் படங்களுக்கு இணையாக என்ற அளவில் இருக்குமாம். வரும் செப்டம்பர் 15ம் தேதியன்று படத்தின் இசையை ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான், அர்ணால்டை கொண்டு வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.


'ஐ' படம் வந்த பிறகு அனைவருமே ஆச்சரியத்தில் 'ஐ' என வாயைப் பிளப்பது நிச்சயம் என்கிறார்கள் படக்குழுவினர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in