நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு, நீண்ட நாட்களாக எஸ்.ஜே.சூர்யா இயக்கி வரும் படம் இசை. வழக்கம்போல அவர்தான் இதிலும் ஹீரோ. புதுமுகம் சாவித்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ஏஎஸ்ஏ மல்டி மீடியா சார்பில் விக்டர்ராஜ் பாண்டியன் தயாரிக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா இதில் கூடுதலாக இசை அமைப்பாளராகவும் ஆகியிருக்கிறார். பாடல்களும் பாடியிருக்கிறார். இசை தொடர்பான படம். மூத்த அனுபவ இசை அமைப்பாளர் ஒருவருக்கும், வளர்ந்து வரும் புதுமுக இசை அமைப்பாளர் ஒருவருக்கும் இடையிலான பனிப்போர்தான் கதைக் களம். இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் இடையிலா பனிப்போர் பற்றியது என்றும் கூறுகிறார்கள்.
நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று (ஆகஸ்ட் 29) வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் பாடல்கள் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 2ந் தேதி படம் ரிலீசாகிறது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.