ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வருகிற தீபாவளிக்கு விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை உள்பட சில படங்கள்தான் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதுவரை போட்டியிலேயே இல்லாமல் இருந்த ஐ படமும் தற்போது சேர்ந்திருக்கிறது. 150 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை டால்பி அட்மோஸ் 14.1 என்ற புதிய சவுண்ட் சிஸ்டத்துடன் ரிலீஸ் செய்கிறார்கள். தற்போது அனைத்துக்கட்ட வேலைகளும் முடிந்து விட்டதால் அடுத்த மாதம் ஆடியோ ரிலீஸ் செய்து விட்டு தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்து விட்டார்களாம்.
முன்னதாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி நடக்கிறது. தெலுங்கு ஐ படத்தின் ஆடியோவை ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானும், தமிழ் ஐ படத்தின் ஆடியோவை ஹாலிவுட் நடிகர் அர்ணால்டும் வெளியிடுகிறார்கள்.
தீபாவளிக்கு பிறகு வெளியாக இருந்த இப்படம் தற்போது முந்திக்கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் விஜய்யின் கத்திதானாம். அப்படம் தீபாவளிக்கு வரும் என்று சொல்லப்பட்டாலும், எதிர்ப்புகள் காரணமாக வருவது கடினம் என்று கூறப்படுகிறது. அதனால்தான், நாம் எதிர்பார்க்கிற தியேட்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீபாவளி தினத்தில் ஐ களமிறங்குகிறதாம்.