பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
'விஸ்வரூபம்' படம் தயாரான போதே 'விஸ்வரூபம் 2' படத்தையும் சேர்த்துத் தயாரித்திருந்தார் கமல்ஹாசன். முதல் பாகம் வெளியான சில மாதங்கள் கழித்து 'விஸ்வரூபம் 2' வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் அப்படத்தைப் பற்றிய பேச்சே எழாமல் போனது. இதனிடையே ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 'உத்தம வில்லன்' படத்தில் கமல் நடித்து முடித்துவிட்டதால் 'விஸ்வரூபம் 2' எப்போது வெளியாகும் என்ற பேச்சு எழுந்தது. கமல்ஹாசனின் நெருங்கிய வட்டாரங்களிடம் நாம் விசாரித்த வரையில் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் பொங்கல் அன்றுதான் வெளிவரும் என்று தெரிவித்தார்கள்.
கமல் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படத்தை தீபாவளியன்றோ அல்லது அதற்கு முன்போ வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்தப் படம் வெளிவந்த சில மாதங்கள் கழித்து கமல் நடிக்கும் அடுத்த படம் வருவது சரியாக இருக்கும் என்று கருதியே பொங்கலை வெளியீட்டுத் தேதியாக குறித்துள்ளார்களாம். அதோடு கமல் அடுத்து நடிக்கும் 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக் அடுத்த மாதம் ஆரம்பமாகி குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் சொல்கிறார்கள். இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. ஆக, அடுத்தடுத்த மூன்று முக்கிய இந்துப் பண்டிகைகளின் போது கமல்ஹாசன் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக உள்ளன.