டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பையா, சிறுத்தை, நான் மகான் அல்ல படங்கள் கார்த்திக்கிற்கு தொடர் ஹிட்டாக அமைந்ததால், அவரை முதல்தட்டு ஹீரோவாக கொண்டு வந்து விட வேண்டும் என்று பெரிய அளவில் பில்டப் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், அதையடுத்து, அவர் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து கார்த்தியின் மார்க்கெட்டை குப்புற விழச் செய்து விட்டது. அதனால் இந்த நிலையை தொடர விடக்கூடாது என்று கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாகயிருக்கும் மெட்ராஸ் படத்தை வெளியிடுவதில் தடுமாற்ற நிலை நீடித்து வருகிறது.
அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் இந்த மெட்ராஸ் படத்தை சரியான நேரத்தில் வெளியிட்டு வெற்றி பெறச்செய்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கூடவே சமீபத்தில்தான் அவரது அண்ணன் சூர்யா நடித்த அஞ்சான் படம் படுதோல்வியடைந்ததால், அந்த பட்டியலில் இந்த படமும் இணைந்து விடக்கூடாது என்று உஷாராகியிருக்கிறார்கள்.
அதனால், மெட்ராஸ் படத்தை ஜூலை 15-ந்தேதியே வெளியிட திட்டமிட்டவர்கள் பின்னர் ஆகஸ்ட் 29ந்தேதி என்று சொன்னார்கள். ஆனால் இப்போது பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் பிக்கப்பாகி ஓடிக்கொண்டிருப்பதால், இது மெட்ராஸ்க்கு உகந்த நேரமல்ல என்று ரிலீஸ் தேதியை அக்டோபர் மாதத்திற்கு மாற்றி விட்டார்களாம். இந்த தேதியாவது உறுதியானதா? இல்லையா? என்பது போகப்போகத்தான் தெரியும்.