மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மல்லிகா ஷெராவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் 'டர்ட்டி பாலிடிக்ஸ்'. இந்த படத்தின் முதல் பார்வை வெளியான போது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. படத்துக்காக வெளியான போஸ்டர் ஒன்றில் மல்லிகா ஷெராவத் உடம்பில் எந்த துணியும் இல்லாமல் மூவர்ணக் கொடியை மேலே போட்டுக் கொண்டு, ஒரு அரசாங்க காரின் மீது அமர்ந்திருப்பது போன்ற டிசைனே வெளியானது. அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் மல்லிகா ஷெராவத் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சரி படம் வெளியாகும் போது பார்த்துக் கொள்ளலாம் என போராட்டக்காரர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர். அந்தப் போராட்டத்தைப் பற்றியும் போராட்டக்காரர்களைப் பற்றியும் மல்லிகா சூடாக ஒரு கமெண்ட் அடித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் அவருடைய நிர்வாணத் தோற்றத்தைப் பார்க்க ஆசைப்படுவதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தால் ஒவ்வொரு நொடியும் அவருடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று அவர்கள் எண்ணுவதாகவும் மல்லிகா ஷெராவத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மல்லிகா நடித்து ஷாக் கொடுப்பதை விட இப்படி சொல்லி கொடுத்திருக்கும் ஷாக் தான் அதைவிட அதிகமாக உள்ளது என்கிறார்கள். இந்திய சினிமா எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது....