'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1979ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் சங்கராபரணம். தமிழ் நாட்டில் தெலுங்கிலேயே வெளிவந்து இங்கும் 100 நாட்கள் ஓடியது. கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் காலத்தை வென்று இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. கே.விஸ்வநாத் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். சோமயாஜூலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி நடித்திருந்தனர்.
தற்போது இந்தப் படத்தை ஸ்ரீசபரிகிரி வாசன் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் பி.எஸ்.ஹரிகரன், டி.பி.செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் இணைந்து நவீன முறையில் டிஜிட்டல் மயமாக்கி வருகிறார்கள். அதோடு பாடல்களை ஆரோ 3டி சவுண்ட் சிஸ்டம் மூலம் மெருகேற்றுகிறார்கள். அதோடு இதனை தமிழிலும் டப் செய்கிறார்கள். அடுத்த மாதம் பாடல் வெளியீட்டு விழா நடத்தி தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.