Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாரதிராஜா படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா!

24 ஆக, 2014 - 13:47 IST
எழுத்தின் அளவு:

பாரதிராஜாவுக்கு முன்பே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டவர் இளையராஜா. இந்நிலையில் 16 வயதினிலே என்ற தனது முதல் படத்தை இயக்கியபோது இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டு சென்றார் பாரதிராஜா. அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்தார். முதல் மரியாதை படம் தனக்கு பிடிக்கவே இல்லை என்ற போதும், பாரதிராஜா தனது நண்பர் என்ற ஒரே காரணத்திற்காக அப்படத்திற்கு இசையமைத்ததாக ஒரு படவிழாவில்கூட சமீபத்தில் தெரிவித்தார் இளையராஜா.

ஆனால், சமீபகாலமாக இளையராஜா-பாரதிராஜா நட்பில் விரிசல் விழுந்திருக்கிறது. அதனால் அன்னக்கொடியைத் தொடர்ந்து தான் இயக்கும் புதிய படத்திற்கு இளையராஜாவிடம் இசையமைக்க பாரதிராஜா கேட்டுக்கொண்டபோது அவர் அதற்கு சரியான பதில் கொடுக்கவில்லையாம். அதனால் அந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளாராம் பாரதிராஜா.


தமிழகத்தில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தை பற்றிய கதையில் அடுத்து ஒரு படம இயக்குகிறாராம் பாரதிராஜா. வயதான ஒருவருக்கும், சிறு குழந்தைகளுக்குமிடையே நடக்கும் சம்பவத்தை மையமாகக்கொண்டு உருவாகும் அந்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் லண்டனில் நடைபெற உள்ளதாம். இப்படத்தை இயக்குவதோடு, முக்கியமான வேடத்திலும நடிக்கிறார் பாரதிராஜா. இப்படத்திற்கு வைரமுத்து பாட்டெழுதுகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in