Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னை - 600028 படத்திற்கு உலகளவில் அங்கீகாரம்!

23 ஆக, 2014 - 19:58 IST
எழுத்தின் அளவு:

2007-ம் ஆண்டு வெளியான படங்களில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு படம் சென்னை-600028. இந்தப்படத்தின் மூலம் தான் நடிகராக இருந்த வெங்கட்பிரபு இயக்குநராக அறிமுகமானார். கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இப்படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வஸந்த், விஜயலெட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரிய எதிர்பார்ப்பு இன்றி வெளியான இப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட்டானது. இப்படியும் படம் எடுத்து ரசிகர்களை கவரலாம் என்று தனது முதல்படத்திலேயே சிறந்த இயக்குநர் என பெயர் எடுத்தவர் வெங்கட்பிரபு. சென்னை-600028 படத்திற்கு பிறகு வெங்கட்பிரபுவின் கேரியர் மளமளவென உயர்ந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தில் நடித்த சிவா, ஜெய், விஜய் வஸந்த் உள்ளிட்ட பலருக்கும் இந்தப்படம் ஒரு பெரிய பிரேக்காக அமைந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு உலகளவில் ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தில் வெளிவரும் நாளிதழ் ஒன்று வெளியிட்ட, உலகின் சிறந்த கிரிக்கெட் சார்ந்த டாப்-5 படங்களில், வெங்கட் பிரபுவின் சென்னை-600028 படமும் இடம் பெற்றுள்ளது. இவை தவிர்த்து இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான லகான் படமும் இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in