ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தின் முழு படப்பிடிப்பும் சமீபத்தில்தான் நிறைவுற்றது. படப்பிடிப்பு நிறைவுற்றதை அடுத்து, தற்போது உத்தம வில்லன் படத்தின் டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படு வேகமாக நடந்து வருகின்றன. ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ள இப்படத்தின் டப்பிங் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. உத்தமவில்லன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் கமல், இரட்டை வேடத்துக்கும் குரலில் வித்தியாசம் காட்டி டப்பிங் பேசி இருக்கிறாராம்.
லேட்டஸ்ட் தகவலின்படி...கமல் சமந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளுக்கு டப்பிங் முடிவடைந்துவிட்டது. இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, பார்வதி நாயர், நாசர், இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் முதலானோர் நடித்துள்ளனர். கமல் டப்பிங் பேசி முடித்த பிறகு மற்றவர்களையும் டப்பிங் பேச அழைத்திருக்கிறார் ரமேஷ் அரவிந்த். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வரும் இப்படம் படு ஜாலியான ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது. டப்பிங் வேலைகள் பரபரப்பாக நடந்தாலும் தயாரிப்பாளர்கள் தர வேண்டிய டப்பு வந்தால்தான் மற்ற வேலைகளை செய்ய முடியுமாம். அஞ்சான் சறுக்கியதால் உத்தமவில்லன் படத்தின் தயாரிப்பு வேலையில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.