Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சான் படத்துக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது: சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி தகவல்

23 ஆக, 2014 - 12:39 IST
எழுத்தின் அளவு:

சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி தயாரித்து இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 15ந் தேதி அன்று வெளிவந்தது. கொடூர கொலைகளும், கவர்ச்சி பாடல்களும் நிறைந்த இந்தப் படத்துக்கு யூ சான்றிதழ் கொடுத்தது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. அஞ்சான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ அதிகாரிகள் கோர்ட்டில் தகவல் அளித்துள்ளனர்.


சினிமா படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக மத்திய தணிக்கை குழு வாரிய தலைவர் ராகேஷ்குமார் சமீபத்தில் சி.பி.ஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று அவர் மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகளிடம் ராகேஷ்குமார் வாங்கிய லஞ்சத்தின் விபரங்களை அளித்தனர். அதில் தமிழ் படமான அஞ்சானும், அதன் தெலுங்கு பதிப்பான சிக்கந்ததரும் இடம் பெற்றிருந்தது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


கோர்ட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: தமிழ் நாட்டில் தற்போது அஞ்சான் என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து ஒரு லேப்டாப், மற்றும் ஐபேட் ஒன்றினை பரிசாக பெற்றுள்ளார். அஞ்சான் படம் ஜூலை மாதம் 24ந் தேதி ராகேஷ் குமார் பார்வைக்கு அனுப்பப்பட்டது அவர் 6 நாட்கள் தன் கையில் படத்தை வைத்துக் கொண்டு அதன் பிறகே பார்த்துள்ளார். அதன் பிறகு ஆகஸ்ட் 6ந் தேதி சான்றிதழ் வழங்கி உள்ளார். அதேபோன்று ஆகஸ்ட் 9ந் தேதி சிக்கந்தர் என்ற தெலுங்கு படத்திற்கு சான்றிதழ் வழங்க 50 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்ததாக சி.பி.ஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in