Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இலங்கை வி‌ழாவை புறக்கணிக்க தமிழ் திரையுலகம் கூட்டறிக்‌கை

20 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

இலங்கையில் நடைபெறும் திரைப்பட விழாவை, ஒட்டு மொத்த திரையுலகமும் புறக்கணிக்க வேண்டும்'' என்று தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை விடுத்துள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் ïனியன் ஆகிய அமைப்புகள் கூட்டாக ஒரு அறிக்கை விடுத்துள்ளன. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த வருடம் இலங்கையில் தமிழ் இனத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என குவியல் குவியலாக ஆயிரக்கணக்கானவர்களை கொன்று ஈழ மண்ணை சுடுகாடாக்கி மகிழ்ந்தது, சிங்கள அரசு. அங்கு கேட்ட மரண ஓலம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனதில் இன்னமும் ஆறாத வடுவாக இருந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் நடைபெறும் தமிழ் இன அழிப்புப்போரை நிறுத்தி, தமிழ் இனத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரை கலைஞர்கள் ஆகிய அனைவரும் ஒன்று கூடி மனிதச்சங்கிலி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் என திரையுலகம் சார்பில் கண்டனங்களை தெரிவித்தோம்.

அதை செவி கொடுத்து கேட்டும், சிங்கள அரசு போரை நிறுத்தவில்லை. நடைபெற்ற தமிழ் இன அழிப்பு போரில், தங்கள் உடல் உறுப்புகளை இழந்து, அந்தப்போரின் நடமாடும் நினைவு சின்னங்களாய் வாழ்ந்து வரும் சொந்தத்தை பார்க்கையில், நெஞ்சமே வெடித்து விடும் போல் இருக்கிறது. நம் சகோதர-சகோதரிகளுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வருகிற ஜுன் 4,5,6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் சர்வதேச இன்திய திரைப்பட விழாவை கொழும்புவில் நடத்தக்கூடாது. அதனையும் மீறி அங்கு அந்த விழா நடப்பதாக இருந்தால், இந்திய திரையுலகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தொழிலாளர் சம்மேளனத்தினர், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே அந்த விழாவை புறக்கணிக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களின் உணர்வுகளுக்கும், உள்ளக்குமுறல்களுக்கும் ஆதரவாக தமிழ்திரை உலகின் இந்த புறக்கணிப்பு முடிவுக்கு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி என இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரையுலகினரையும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தான் செய்த சதி வேலைகளை மறைத்து, குறுக்கு வழியில் புகுந்து புகழ் தேட நினைக்கும் சிங்கள அரசுக்கு, இந்திய திரையுலகம் குறிப்பாக, தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு, அவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

robin rajendran - colombo,இலங்கை
22 மே, 2010 - 14:34 Report Abuse
 robin rajendran stupid fellows now we are living peacefully than before.if you are tring to do some thing pls try to help srilankan tamils who are living in srilanka to uplift their life style.not dance according to expat tamils who lives in western world who never helps colombo or upcountry tamils
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in