ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷா, சினிமாவில் நடிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தென்னிந்திய சினிமா மட்டுமினறி, இந்தியிலும் நடித்து விட்டார். ஆனால், மிதமான கவர்ச்சி என்பதில் உறுதியாக இருந்தார். அவரது அதிகபட்ச கிளாமராக தொடை கவர்ச்சிதான்.
ஆனால், சமீபகாலமாக, தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் கவர்ச்சி பிரவேசம் அதிரடியாக இருப்பதால், தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக த்ரிஷாவும் கவர்ச்சிக்கோதாவில் இறங்கியிருக்கிறார். ஆனால், தமிழில் அல்ல, கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்து வரும் படத்தில அப்படி நடித்திருக்கிறாராம்.
த்ரிஷாவைப் பொறுத்தவரை அது கன்னடத்தில் நடிக்கிற முதல் படமாகும். அப்படத்தில் டூபீஸ் உடையில் நடித்திருப்பவர் முத்தக்காட்சியிலும் பின்னி எடுத்திருக்கிறாராம். அதனால் அந்த போட்டோக்களை இணையதளங்களில் பரவ விட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். த்ரிஷாவின் இந்த கவர்ச்சி அஞ்சான் சமந்தா ரேஞ்சுக்கு இல்லை என்றொரு கருத்து இருந்தபோதும், அடுத்து சந்தர்ப்பம் கிடைத்தால் அவரது எல்லையையும் த்ரிஷா முறியடித்து விடுவார் என்றும் அவரது நடவடிக்கைகளை வைத்து உறுதி செய்கிறார்கள்.