தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்விங்கர்ஸ் என்ற நடனக்குழுவில் ஆடிக்கொண்டிருந்த பரத் 2003 ஆம் ஆண்டு ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு விஷால் நடித்த செல்லமே படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். அடுத்து வந்த காதல் படத்தில் கலங்க வைத்தார். அப்படம் தந்த வெற்றியால் பரத்தின் கேரியர் கிராஃப் ஜிவ்வென உயர்ந்தது. இப்படியாக பரத்தின் திரையுலகப்பயணம் அமர்க்களமாக அமைந்தாலும், அதன் பின்னர் அவருடைய கேரியரில் அநியாயத்துக்கு தடுமாற்றம்.
2005 ஆம் ஆண்டு வெளிவந்த பிப்ரவரி 14, பழனி, தம்பிக்கு இந்த ஊரு, 555 என பரத் நடித்த பல படங்கள் தோர்வியடைந்தன. பட்டியல், வெயில், எம் மகன், வானம் ஆகிய படங்கள் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயரை சம்பாதித்துக் கொடுத்தன. இந்நிலையில் எப்படியாவது வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் பரத். அவரது 25வது படமாக நேற்று வெளியாகி உள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கிறது.
கதாநாயக நடிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு 25 ஆவது படம் முக்கியமான படம். எனவே 25 ஆவது படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்பதில் வெறியோடு இருப்பார்கள். அந்த வகையில் அஜித்திற்கு அமர்க்களம், சூர்யாவிற்கு சிங்கம், தனுஷுக்கு வேலையில்லா பட்டதாரி என தங்களின் 25வது படத்தை வெற்றியாக்கி தங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள். விஜய்யின் 25 ஆவது படம் கண்ணுக்குள் நிலவு. பாசில் இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
பரத்தின் 25 ஆவது படமான ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி எந்த பட்டியலில் சேரப்போகிறது?