Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரை சதம் அடித்தார் அரிமா நம்பி

22 ஆக, 2014 - 14:17 IST
எழுத்தின் அளவு:

அன்னை இல்லத்து வாரிசு விக்ரம் பிரபு நடித்த 3வது படமான அரிமா நம்பி, இன்று 50 வது நாளை தொட்டு விக்ரம் பிரபுவிற்கு ஹாட்ரிக் ஹிட்டை கொடுத்துள்ளது. கும்கி படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபு, அதன் பிறகு நடித்த இவன் வேற மாதிரி படத்திலும் வெற்றியை ருசித்தார். இப்போது மூன்றாவது வெற்றி.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கு துப்பாக்கி படத்துக்கு பிறகு கிடைத்திருக்கும் வெற்றி. படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இதையும் கலைப்புலி தாணுவே தயாரிக்க இருக்கிறார். ஹீரோயின் பிரியா ஆனந்தும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணிக்கு இசை அமைப்பாளராக நல்ல -ஓப்பனிங் கிடைத்துள்ளது. கடந்த ஜூலை 4ந் தேதி வெளியான அரிமா நம்பி சென்னையில் சத்யம், எஸ்கேப், சாந்தி, மாயாஜால், ரோகிணி காம்ளக்ஸ்களில் 50 வது நாள் வரை வந்திருக்கிறது. வெளியூர்களில் கோவை, மற்றும் மதுரையில் 50 நாளை தொட்டிருக்கிறது. 100வது நாளுக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், சிவாஜி குடும்ப தியேட்டரான சாந்தியில் 100 வது நாள் வரைக்கும் கொண்டு சென்றாலும் ஆச்சர்யமில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in