ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆமீர்கான் தற்போது நடித்து வரும் 'பிகே' படத்தின் முதல் பார்வையாக, ஒரு டேப் ரிக்கார்டரை மட்டும் மறைத்துக் கொண்டு ஒரு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டார். முதல் புகைப்படத்தை அனைவரும் கிண்டலத்ததால், இரண்டாவது புகைப்படத்தில் முழுமையாக உடை அணிந்தபடியான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
சமீபத்தில் மற்றுமொரு செய்தியைச் சொல்லி மேலும் ஒரு அதிர்ச்சியைப் பரவவிட்டிருக்கிறார். “தூம் 3' படத்தில் நான் தொப்பி அணிந்து நடித்ததை சல்மான் டிவி நிகழ்ச்சியில் அணிந்து இன்னும் பிரபலப்படுத்தினார். தற்போது நான் நிர்வாணமாக நடித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தேன். சல்மான் கான் பல படங்களில் சட்டை இல்லாமல் நடித்திருக்கிறார். அது ஒன்றும் பெரிய சவால் அல்ல. அவருடைய பேண்ட்டை அவர் கழற்றினால் அதுதான் பெரிய சவால். இதுதான் எங்களது நட்புக்கு சரியான சோதனை,” என்று பேசியிருக்கிறார்.
ஆமீர் கான், சல்மான் கான் இருவரும் ஹிந்தித் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள். சல்மான் கான் அவர் பங்கேற்ற 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் 'தூம் 3'யில் ஆமீர் கான் அணிந்த தொப்பியை அணிந்து பிரபலப்படுத்தினார். சல்மான் கான் நடித்த 'ஜெய் ஹோ' படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பிரபலப்படுத்தினார் ஆமீர் கான். இப்போது ஆமீர் கான் கேட்டுக் கொண்டதை சல்மான் நிறைவேற்றுவாரா என்று பார்ப்போம்...?