பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான் ஆகிய மூவரும் ஒரு காலகட்ட நடிகர்கள், மூவருமே முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள். மூன்று பேருக்கும் இடையே ஒரு பனிப்போர் இருக்கிறது. அதிலும் அமீர்கான்-ஷாரூக்கான் இடையே நீண்டநாட்களாக ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அமீர்கானிடம் ஒருபேட்டியின் போது நீங்கள், சல்மானை பற்றி சகஜமாக பேசுவது போல், ஷாரூக்கான் பற்றி பேசுவது கிடையாதே.. ஏன் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமீர்கான், நான் ஷாரூக்கானுக்கு எதிரானவன் கிடையாது. எங்களது இருவரது பாதையும் வெவ்வேறானது. எனக்கு ஷாரூக்கானை பிடிக்காது என்பது போன்று எதுவும் கிடையாது. ஷாரூக்கான் உடன் எனது உறவை மதிக்கிறேன். நான் எனது எல்லையை மீற மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.