சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, பிரபல பாப் சிங்கர் யோ யோ ஹனி சிங்கின் ஆல்பத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர்களது கூட்டணியில் உருவாகி வரும் ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் சோனாக்ஷி சின்ஹா-ஹனி இருவரும் காரில் அமர்ந்தபடியும், அவர்களை போலீஸ் துரத்துவது போன்றும் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. இந்த போஸ்டரில் மிகவும் பேஷனாக தோன்றுகிறார் சோனாக்ஷி. இதுகுறித்து டுவிட்டரில் சோனாக்ஷி கூறியுள்ளதாவது, யாரா தேரா சூப்பர் ஸ்டார்... டெசி கலாக்காருக்காக காத்திருக்கிறேன். ஆகஸ்ட் 26-ல் ரிலீஸாகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் முதன்முறையாக சோனாக்ஷி சின்ஹா, சினிமாவில் நடிப்பதை விட இந்த ஆல்பத்தில் கிளாமராக தோன்றுகிறார். அவரை பார்க்கும்போதே ஒரு ராக்ஸ்டார் லுக் தெரிகிறது.
இதனிடையே, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி, ரஜினி திரையுலகில் 40ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் 40 வருடங்களாக மக்கள் மனதில் தலைவனாக இருக்கும் ரஜினி சாருக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.