‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தெலுங்கில், 'ஆகடு' படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என, பல நடிகைகள் போட்டி போட்ட போதும், தமன்னாவுக்கு பிரத்யேக சிபாரிசு செய்துள்ளார் மகேஷ்பாபு.இதனால், புதுவரவு நடிகைகளால், தன் மார்க்கெட் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்து, இப்போது மீண்டு விட்ட தமன்னா, அடுத்தபடியாக மேலும் சில ஹீரோக்களும் ஆதரவுகரம் நீட்டியதை அடுத்து, அதிக நம்பிக்கையில் இருக்கிறார். மேலும், டைரக்டர்களின் நடிகை என்ற வட்டத்தில் இருந்து வெளியே வந்து, 'இப்போது நான் ஹீரோக்களின் நாயகியாகி விட்டேன்' என, வெளிப்படையாக கூறி வருகிறார்.