பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் வருண் தவான். இவர் தற்போது ஸ்ரீராம் ராகவன் இயக்கும், 'பதல்பூர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடன்ட் ஆப் தி இயர், மெயின் தேரா ஹீரோ போன்ற படங்களில் தனது நடிப்பை நிரூபித்த வருண், பதல்பூர் படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோவாக அவதரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் ஒரு காட்சியில் சக நடிகரான வினய் பதக்கை, வருண் அடிக்க வேண்டும். இந்தக்காட்சியை படமாக்கியபோது வருண், நிஜமாகவே சற்று பலமாக வினய்யை தாக்கிவிட்டார். இதில் வினய்க்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வினய், ஓரிரு நாளில் சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்க தொடங்கிவிட்டார்.