ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனுஷின் ஒண்டர் பார் நிறுவனமும், வெற்றி மாறனின் க்ராஸ் நோட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் காக்கா முட்டை. வெற்றிமாறனின் உதவியாளர் மணிமாறன் இயக்கி உள்ளார். சென்னையின் குடிசை பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள், தங்கள் பகுதியில் புதிதாக திறக்கப்படும் ஒரு பீட்சா கடையில் பீட்சா சாப்பிட நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதான் கதை.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. அடுத்த மாதம் ரிலீசாகிறது. அதற்கு முன்பாக வருகிற செப்படம்பர் 4ந் தேதி முதல் 14ந் தேதி வரை நடக்கும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் முதல் நாள் திரையிட காக்க முட்டை தேர்வாகி இருக்கிறது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
டொராண்டோ படவிழாவில் இதற்கு முன் மணிரத்னம் இயக்கிய இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.