Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை நஸ்ரியாவை மணந்தார் நடிகர் பஹத் பாசில்!

21 ஆக, 2014 - 12:41 IST
எழுத்தின் அளவு:

நடிகர் பஹத் பாஸிலுக்கும், நடிகை நஸ்ரியாவுக்கும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சிறப்பாக திருமணம் நடந்தது. தமிழில், நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நசீம். தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் ஒன்றிரண்டு படங்களிலேயே தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். அதற்கு முக்கிய காரணம் அவரது துறுதுறு நடிப்பு தான்.


தமிழில் டாப் நடிகையாக உயர்ந்து வந்த இவருக்கும், பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகனும், வளர்ந்து வரும் முன்னணி நடிகருமான பஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. பிறகு இருவீட்டாரது சம்மதப்படி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமண நிச்சயமும், ஆகஸ்ட் 21ம் தேதி திருமணமும் செய்ய முடிவு செய்யப்பட்டது.


அதன்படி இவர்களது திருமணம், இன்று(ஆகஸ்ட் 21ம் தேதி) திருவனந்தபுரத்தில் சிறப்பாக நடந்தது. இருவரும் இஸ்லாம் மதத்ததை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது மத வழக்கப்படி திருமண சடங்குகள் நடந்தன. இந்த திருமணத்தில் இருவீட்டாரது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


ஆகஸ்ட் 24ம் தேதி, ஆலப்புழாவில் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் தமிழ் மற்றும் மலையாளத்தை சேர்ந்த திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.


திருமண வாழ்த்துக்கள் பஹத்-நஸ்ரியா!!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in