ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல இந்தி நடிகையான மனீஷா கொய்ராலா, தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், உயிரே, பாபா உள்பட சில படங்களில் நடித்தார். கடைசியாக தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் வில்லியாக நடித்தார். அதன்பிறகு மனீஷாவுக்கு படங்கள் இல்லை. அதனால் பாலிவுட்டுக்கு சென்று கிடைக்கிற வேடங்களில் நடித்து வந்தார். அதையடுத்து, திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலக நினைத்த மனீஷா, 2010ல் நேபாளத்தைச்சேர்ந்த சாம்ராட் தாஹை என்பவரை திருமணம் செய்தார். ஆனால், அவருடனான இல்லறம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2012ம் ஆண்டு கருத்து வேறுபாடு என்று சொல்லி அவரை விவாகரத்து செய்தார் மனீஷா.
அதன்பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், வெளிநாடு சென்று சிகிச்சை செய்து விட்டு திரும்பி வந்தார். அதோடு, மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வருவதோடு, ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.