கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சிம்பு, நயன்தாரா நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தை பாண்டியராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிம்புவின் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு காதலி வருகிறார். அந்த காதலியாக நடிக்க முதலில் ஹன்சிகாவை கேட்டார்கள். அவர் மறுக்கவே அடுத்து டாப்ஸி நடிப்பார் என்று கூறப்பட்டது.
நயன்தாராவுக்கும், டாப்ஸிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் வந்த மனக்கசப்பு மாறாமல் இருப்பதால் இருவரும் இணைந்து நடிப்பதில் சிக்கல் இருந்தது. அதனால் தற்போது டாப்ஸிக்கு பதில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு நடக்கிறது. இறுதி நாட்களில் ஆண்ட்ரியாவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள். ஆண்ட்ரியா, சிம்புவுடன் இங்க என்ன சொல்லுது படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏற்கெனவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.