‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அறிமுக இயக்குனர் கார்த்திக் ரிஷி இயக்கி உள்ள படம் மேகா. அஸ்வின், சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளர். இந்தப் படம் வருகிற 22ந் தேதி வெளிவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தை மீடியாக்களுக்கு போட்டுக் காட்டினார்கள். படத்தின் கிளைமாக்சை பார்த்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி. காரணம் இதே கிளைமாக்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்தில் இடம்பெற்றிருந்தது. அதனை படக் குழுவினரிடம் சுட்டிக் காட்டியதும் தற்போது மறு படப்பிடிப்பு நடத்தி கிளைமாக்சை மாற்றி உள்ளனர்.
இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பத்திரிகை நண்பர்களின் ஆசோசனையை ஏற்று படத்தில் சில மாறுதல்களை செய்துள்ளோம். குறிப்பாக கிளைமாக்சை மாற்றி எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக சுபமாக மாற்றி உள்ளோம். திட்டமிட்டபடி படம் 22ந் தேதி ரிலீசாகிறது என்று அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.