மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் கமல்ஹாசனின் மூத்த வாரிசான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். சினிமா படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், பார்டி போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தவறுவதில்லை ஸ்ருதி. சமீபத்தில் பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வருண் தவான் பார்ட்டி ஒன்றை வழங்கினார். இதில் அவர் நடித்து முடித்துள்ள பதால்பூர் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இப்படத்தில் நடித்த யாமி கவுதம், ஹூமா குரேசி, நவாசுதீன் சித்திக், திவ்யா தத்தா, முரளி சர்மா, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், தயாரிப்பாளர் தினேஷ் விஜயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். படக்குழுவினர் தவிர இந்தபார்ட்டியில் நர்கீஸ் பக்ரி, அர்ஜூன் கபூர், ரோகித் ஷெட்டி, மான்யா தத்தா, கிரிஷிகா லூலா ஆகியோருடன் ஸ்ருதிஹாசனும் பங்கேற்றார்.