பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
மம்முட்டி, ரஞ்சித் நடித்த 'மறுமலர்ச்சி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் கலாபவன் மணி. அதன் பின் விக்ரம் நடித்த 'ஜெமினி' படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்து நல்ல பெயரைப் பெற்றதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபகாலமாக அதிகமான தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த கலாபவன் மணி தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த கதாபாத்திரத்தில் மலையாளத்தில் கலாபவன் ஷாஜன் நடித்திருந்தார்.
கமல்ஹாசன் நடிக்கும் படம் ஒன்றில் கலாபவன் மணி நடிப்பது இதுவே முதல் முறை. இந்தப் படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகளாக 'ஜில்லா' படத்தில் விஜய் தங்கையாக நடித்த நிவேதா நடிக்க, இளைய மகளாக மலையாளப் படத்தில் நடித்த அதே எஸ்தர் அனில் நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரமான காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மலையாளத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்த ஆஷா சரத் நடிக்கிறார். இன்னும் கமலுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது சஸ்பென்சாகவே உள்ளது.
ஒரு பக்கம் கேரள நீதிமன்றத்தில் இப்படம் தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருந்தாலும் தமிழில் முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர். 'உத்தம வில்லன், விஸ்வரூபம் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்க உள்ள இப்படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.