Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகேஷ் பாபுவின் மனம் கவர்ந்த நாயகி...!

20 ஆக, 2014 - 11:39 IST
எழுத்தின் அளவு:

நடிகர், நடிகைகளிடம் எடுக்கப்படும் எந்த ஒரு பேட்டியாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக இடம் பெறும் கேள்வி ஒன்று இருக்கும். நடிகர் என்றால் உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என்றும், நடிகை என்றால் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்றும் தவறாமல் கேட்பார்கள். அவர்களும் எனக்கு எல்லாரையுமே பிடிக்கும் என பொதுவாக ஒரு பதிலை அள்ளி விடுவார்கள். புதிதாக வரும் நடிகைகளில் ஒரு சிலர் மட்டும், யாருடன் நடிக்க ஆசைப்படுகிறார்களோ அவர்களது பெயரை மட்டும் சொல்லுவதும் வழக்கம். அப்போதுதான் அவர்கள் படங்களில் நடிக்க ஒரு வாய்ப்பாவது கிடைக்குமே என்ற நப்பாசைதான் அதற்குக் காரணம்.


தமிழ் சினிமாவிற்கு வந்தால் கண்டிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் பெயரைச் சொல்லி விடுவார்கள். சிலரோ பீல்டில் இல்லாத சிலரது பெயரைச் சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். தெலுங்குத் திரையுலகில் கண்டிப்பாக சிரஞ்சீவி பெயரைச் சொல்லிவிடுவார்கள். அப்போதுதான் அவர்களது ரசிகர்களையும் நமது ரசிகர்களாக்கிக் கொள்ள முடியும். தெலுங்குத் திரையுலகின் இன்றைய இளம் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவிடம் சமீபத்தில் இப்படி ஒரு கேட்கப்பட்டது. அவர் சிறிதும் தயக்கம் இல்லாமல் எல்லா காலத்திலும் எனக்குப் பிடித்த நாயகி ஸ்ரீதேவி தான் என தயங்காமல் பதில் சொல்லியிருக்கிறார்.


மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணாவுடன் 80களில் ஸ்ரீதேவி பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பல படங்கள் வெற்றிப் படங்கள். இன்றைய ரசிகர்கள் அந்த ஜோடியை இன்றும் தொலைக்காட்சியில் பார்க்கலாம். கலர் கலராக டிரஸ் அணிந்து கொண்டு இருவரும் நடனமாடும் பாடல்கள் பல படங்களில் இடம் பெற்றுள்ளன.


இப்படி ஒரு சாமர்த்தியமான பதிலை அளித்து இன்றைய இளம் நாயகிகளிடமிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார் மகேஷ் பாபு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in