சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
டைரக்டர் வெங்கட்பிரபு-பிரேம்ஜி ஆகிய இருவரும் கங்கை அமரனின் வாரிசுகள். இருவரும அண்ணன்-தம்பி என்றாலும் நண்பர்களைப் போன்று ஜாலியாக பழகக்கூடியவர்கள். கேர்ள் ப்ரண்டுகளை கமெண்ட் அடிப்பது முதல் பார்ட்டி வகையறாக்கள் வரை இருவரும் தோள் போட்டுக்கொண்டு கலந்து கொள்வார்கள். இருவருக்குமிடையே அத்தனை ஒன்றுமை.
அதனால்தான் தான் இயக்கும் எந்த படமாக இருந்தாலும் அதில் கதை உருவாக்கும்போதே பிரேம்ஜிக்கென்றே முக்கிய கேரக்டர் கொடுத்து விடுவார் வெங்கட்பிரபு. அதனால் அண்ணன் மீது தம்பி பிரேம்ஜிக்கு அளவற்ற பாசம். அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் கொதித்து எழுந்து விடுவார்.
இந்த நிலையில், அஜீத் நடித்த மங்காத்தா படத்தை வெங்கட்பிரபு இயக்கியபோது அவரது டைரக்ஷன் பற்றி சிலர், தேவையில்லாத கமெண்ட்ஸ் கொடுத்தார்களாம். இதை தற்போது தனது டுவிட்டரில் பல வருடங்களுக்குப்பிறகு வெளியிட்டுள்ளார் வெங்கட்பிரபு.
ஆனால், பிரேம்ஜியோ தனது டுவிட்டரில், தனது அண்ணனின் டைரக்ஷன் பற்றி கிண்டல் செய்வது போன்று கமெண்ட்ஸ் கொடுத்த அவர்களை தவறான வார்த்தைகளை பிரயோகம் செய்து திட்டித்தீர்த்துள்ளார். இந்த விசயத்தை கேள்விப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.