தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் மொழி, அபியும் நானும், ராவணன் உள்பட பல படங்களில் நடித்தவர் பிருத்விராஜ். தற்போது காவியத்தலைவன் படத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான இவர், தற்போது அங்கு வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ்கிறார். மேலும், அதிகப்படியான படங்களில் நடித்தபோதும் தமிழ், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் பிருத்விராஜ்.
இவர் கடந்த 2011ம் ஆண்டு சுப்ரியா என்ற டி.வி காம்பயரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக காதல் தம்பதிகளாக வாழ்ந்து வந்த பிருத்விராஜ்-சுப்ரியா தம்பதிகள் விரைவில் அப்பா- அம்மா ஆகப் போகிறார்கள்.ஆமாம், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுப்ரியா கடந்த சில தினங்களாக பிரசவத்திற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம்.
அதனால், தனது முதல் வாரிசு வரப்போகிற சந்தோசத்தில் இருக்கும் பிருத்விராஜ், மனைவியை மருத்துவமனையில் அனுமதித்ததில் இருந்து தனது படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களையும கேன்சல் செய்து விட்டு மனைவியுடனேயே இருந்து வருகிறாராம். இன்றோ அல்லது நாளையோ கூட பிருத்விராஜ் அப்பா ஆன சந்தோச செய்தி நமது காதுகளுக்கு வரலாம்.