இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை மஞ்சுவாரியார் ஒரு பிரபலமான நகை கடை நிறுவனத்தின் விளம்பர தூதராக இருக்கிறார். சமீபத்தில் மஞ்சு போஸ் கொடுத்த விளம்பரம் ஒன்று மலையாள பத்திரிகைகளில் வெளியானது. அதில் நர்ஸ் வேடத்தில் வைர நகை அணிந்து கொண்டு மஞ்சு நிற்க கீழே "இப்போது யார் வேண்டுமானாலும் வைர நகைகள் வாங்கலாம்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதாவது மிகக் குறைந்த சம்பளம் வாங்கி கீழ்நிலையில் இருக்கும் நர்சுகள்கூட வாங்கலாம் என்பது இதன் பொருள்.
இந்த விளம்பரம் கேரள நர்ஸ்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வளைத்தளங்களில் மஞ்சு வாரியாரை கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து கேரள நர்ஸ்சுகள் பெடரேஷன் தலைவி ஜாஸ்மின்ஷா கூறியதாவது: கேரள நர்ஸ்சுகள் உலகம் முழுவதும் மக்களுக்கு சேவையாற்றி நல்ல வசதியோடும், அந்தஸ்தோடும் இருக்கிறார்கள். உள்ளூரில் பணியாற்றும் சிலர் வேண்டுமானால் சிரமத்தில் இருக்கலாம். என்றாலும் நர்ஸசுகளை இந்த விளம்பரம் பிச்சைக்காரர்கள் போலவும், கீழானவர்கள் போலவும் சித்தரிக்கிறது. இந்த விளம்பரத்தை உடனே வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும். புனிதமாக கருத வேண்டிய நர்ஸ்சுகளை வியாபார யுக்திக்காக பயன்படுத்தியிருப்பது தரம்தாழ்ந்த செயலாகும். என்கிறார் ஜாஸ்மின்ஷா.