வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கோடம்பாக்கத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனின் தொல்லைதான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த பிறகு மேடைக்கு மேடை எனக்கு போட்டி ரஜினிதான். காரணம் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவதுதான் எனது லட்சியமே என்று முழங்கி வந்தார் பவர் ஸ்டார். ஆனால் அவர் சொல்வதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் ஏதோ கோமாளித்தனமாக சொல்கிறார் என்றே கருதினர்.
ஆனால் இப்படி சிலர் அவரது காதுபடவே சொல்லியது அவரை ரொம்பவே டென்சன் செய்து விட்டதாம். சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது யாருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்களோ அதை வைத்துதான் ஒருவருக்கு கொடுக்கப்படுவது. அந்த வகையில, இன்றைக்கு நான் எந்த மேடைகளில் ஏறினாலும் என்னைப் பார்த்ததும் ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகிறார்கள்.
அதுமட்டுமின்றி, சில கல்லூரி விழாக்களுக்கு செல்லும்போது இளவட்ட பெண்களெல்லாம் என்னுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதில் பெரிய ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த அளவுக்கு சிறுசுகள் முதல் பெருசுகள் வரை நான் கவர்ந்திருக்கிறேன் என்று கூறி வரும் பவர் ஸ்டார், ரஜினிதான் தனக்கு போட்டி என்பதை மேலும் நிரூபிக்க டிசம்பர் 12ந்தேதி ரஜினி நடித்த லிங்கா படம் திரைக்கு வருவதால், தான் நாயகனாக நடித்துள்ள ஆனந்த தொல்லை படத்தையும் அன்றைய தினமே வெளியிடுகிறாராம்.
அதனால், மொத்த தியேட்டர்களையும் லிங்கா டீமே கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக இப்போதே, சில தியேட்டர்களை தன்பக்கம் இழுக்கும் வேலைகளில் இறங்கி விட்டார் பவர்ஸ்டார் சீனிவாசன்.