Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மட்டமான படங்களில் நடிச்சு ஏமாத்த விரும்பல : அஜித்

13 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

மட்டமான படங்களில் நடிப்பதற்கு பதில் சும்மா வீட்ல உட்கார்ந்து விடலாம் என்று நடிகர் அஜித் ஆக்ரோஷமாக பேட்டியளித்துள்ளார். கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித் அளித்துள்ள பேட்டியில், படங்கள் ஓடாததால் ரேஸில் கவனம் செலுத்துகிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில், நான் இதுவரை நடிச்ச எல்லா படங்களிலும் என்னோட 100 சதவிகித உழைப்பை கொடுத்துத்தான் நடிச்சிருக்கேன். ஆனா, அதில் பல படங்கள் ஹிட் ஆகலைன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை. அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க. என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக்கிறதுக்கு பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடி கோடியா சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்கு சந்தோஷம்தான் சார் முக்கியம் என்று கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், இப்போ நான் அரசியல்வாதி இல்லைன்னு யார் சொன்னது? இப்பவும் எப்பவும் அரசியல் என்னை சுத்தி இருந்துட்டேதான் இருக்கு. சினிமா இண்டஸ்ட்ரி முழுக்கவே பாலிடிக்ஸ்தான். கருணையே இல்லாத அந்த இண்டஸ்ட்ரியில் ஒருத்தன் வாழணும்னா, அவனுக்கு நிச்சயம் அரசியல் தெரிஞ்சிருக்கணும். சினிமாவில் எந்த காட்ஃபாதரும் இல்லாம 18 வருஷம் சமாளிச்சு நிக்க, சாதிக்க, நானும் எப்பவோ அரசியல்ல இறங்கிட்டேன். ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கு. அரசியல் இல்லாத ஒரு இடம்கூட இந்த உலகத்தில் இல்லை. அரசியல் இல்லாத மனுஷன் யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அஜீத் மட்டும் அரசியலில் இல்லாமல் இருக்க முடியுமா என்ன? என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (81) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (81)

sahayaraj - vadakangulam,இந்தியா
28 பிப், 2012 - 17:05 Report Abuse
 sahayaraj தல அஜித், நீங்கள் நல்ல படத்தை மட்டும் ஒப்புகொல்லுங்கள்.
Rate this:
lion ஷிவா - qatar,இந்தியா
30 அக், 2011 - 15:36 Report Abuse
  lion   ஷிவா தல தான் அடுத்த superstar .
Rate this:
vino - vilupuram tamilnadu,இந்தியா
17 அக், 2011 - 15:00 Report Abuse
 vino ஹா ஹா அசித்து ரசிகா செம காமெடி வெளில போய் சிரிங்க
Rate this:
பாசில் மதுரை - madurai,இந்தியா
13 செப், 2011 - 11:44 Report Abuse
 பாசில் மதுரை கலக்குங்க தல ajith உங்க அரசியல் அனுபவம் மத நடிகருகளுக்கு ஒரு படமா இருக்கட்டும் தல rockz
Rate this:
KARUPPASAMY - COIMBATORE,இந்தியா
11 ஆக, 2011 - 16:00 Report Abuse
 KARUPPASAMY நல்ல கருத்து , இனிமேல் ஆவது நல்ல படம் நடிங்க ,அப்போது தான் படம் பார்த்த திருப்தி இருக்கும் ,
Rate this:
மேலும் 76 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in