ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கை, கால் மற்றும் முதுகில் பச்சை குத்திக் கொள்வதில், பல நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பட்டியலில், கோலிவுட் நடிகைகளில் த்ரிஷா, 'ரெமோ' என்றொரு 'கார்ட்டூன்' மீனை, தன் கையில் பச்சைக் குத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து, நயன்தாரா தன் கையில் பிரபுதேவாவின் பெயரையும், முதுகில் தேளையும் பச்சை குத்தியுள்ளார்.இவர்கள் வரிசையில், ஸ்ருதி ஹாசனும் இடம் பிடித்துள்ளார். தன் காலிலும், கையிலும், தன்னைக் கவர்ந்த அழகிய மலர்களை பச்சை குத்தியிருக்கும் ஸ்ருதி, தன் பெயரை தமிழில் முதுகிலும், ஆங்கிலத்தில் கையிலும் எழுதியுள்ளார்.சிலரைப் போன்று அதை மறைத்து வைக்காமல், கேமரா கண்களுக்கும் அவ்வப்போது காண்பிக்கிறார் ஸ்ருதி. தன் உடம்பில், இதுவரை ஐந்து இடங்களில் பச்சை குத்தியுள்ளார், ஸ்ருதிஹாசன்.