ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா, மைக்கேல் ஜாக்சனைப் பார்த்துத்தான் தானும் நடனமாட வந்ததாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஒரு நடன நடிகராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, நடன இயக்குனராக மாறி, பின்னர் ஹீரோவாக நடித்து, தெலுங்கில் இயக்குனராக வெற்றி பெற்று, தமிழிலும் சாதித்து, தற்போது இந்தித் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார் பிரபுதேவா.
இயக்கத்தில் இறங்கிய பின் நடிப்பதைக் குறைத்துக் கொண்டாலும் நட்புக்காக சில படங்களில் நடித்து வந்தார். தற்போது, அவர் இயக்கி வரும் ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ஒரு பாடலை உருவாக்கி அதில் அவரும், படத்தின் நாயகனான அஜய் தேவகனும் நடனமாட இருக்கிறார்களாம். அந்தப் பாடலுக்கு பிரபு தேவாவே நடன அமைப்பும் செய்யப் போகிறாராம். அவருடைய மனம் கவர்ந்த நாயகனுக்காக பிரபுதேவா செய்யும் முறையான சமர்ப்பணமாக இப்பாடல் இருக்கப் போகிறது என்கிறார்கள்.
இந்தித் திரையுலகைப் பொறுத்தவரை பிரபு தேவா பக்கா கமர்ஷியல் இயக்குனராக மாறிவிட்டார். இருந்தாலும் அவருடைய இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கத் தயாராக இருக்கிறார்கள். பிரபுதேவா ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தைச் செய்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அது இந்த ஆக்ஷன் ஜாக்சன் படத்திலும் தொடர்கிறது. இந்தப் பாடலை இம்மாத இறுதியில் படமாக்க இருக்கிறார்களாம்.