ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
சித்தார்த், சிம்ஹா, லட்சுமிமேனன் நடித்த ஜிகிர்தண்டா படம் கடந்த ஆகஸ்ட் முதல் தேதி வெளிவந்தது. இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது ஏற்கெனவே வெளியான தியேட்டர்கள் தவிர கூடுதலாக 60 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளது.
படத்திற்கு தொடர்ந்து மக்கள் அதிக அளவில் வருவதாலும், கடந்த வெள்ளிக்கிழமை படங்கள் எதுவும் வெளிவராததால் காலியான தியேட்டர்கள் ஜிகிர்தண்டாவை கேட்டு வாங்கி திரையிடுகின்றன. அதனால் 60 தியேட்டர்கள் அதிகரித்துள்ளது. திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் இதுவரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் வில்லனாக நடித்த சிம்ஹா வீட்டு முன் தயாரிப்பாளர்களின் கார்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கின்றன.
நய்யாண்டி படத்தில் பெரிய இழப்பை சந்தித்த தயாரிப்பாளர் பைஃவ் ஸ்டார் கதிரேசன் உற்சாகமாகியிருக்கிறார். படத்தின் இந்தி உரிமத்தை கணிசமான தொகைக்கு விற்றிருக்கிறார். புதிய உற்சாகத்ததோடு தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்க தயாராகிவிட்டார்.