'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சினிமா படங்களில் நடித்து வந்தாலும் டி.வி., நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். பல வருடங்களாக கோன்பேனாகா குரோர்பதி எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றுள்ள நிலையில், லேட்டஸ்ட்டாக பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். இவர் தற்போது பிரபல குத்துசண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள மேரி கோம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை புரொமோட் பண்ணும் விதமாக குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தி ரெட் பிரேகேடு எனும் அமைப்பை சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டனர். இந்த அமைப்பு பெண்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கான பயிற்சியை அளித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டு வெற்றி பெற்ற தொகையை இந்த அமைப்புக்கு வழங்கினார்.