டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா உலகைப்பொறுத்தவரை அம்மாக்களை கெளரவப்படுத்தும் வகையில் ஏராளமான பாடல்கள் உள்ளன. அதேபோல் குழந்தைகளை கெளரவப்படுத்தும் பாடல்களும் உள்ளன. ஆனால் அப்பாக்களை கெளரவப்படுத்தும் வகையில் பாடல்கள் வருவது என்பது ரொம்பவே அரிதான விசயம்.
அதனால் தான் இசையமைக்கும் ஏதாவது ஒரு படத்தில் அப்படியொரு பாடலை கம்போஸ் செய்ய வேண்டும் என்று பல வருடங்களாக யோசித்து வந்தாராம் இசையமைப்பாளர் டி.இமான்.
அந்த சந்தர்ப்பம் விக்ரம்பிரபு நடிப்பில் தயாராகியுள்ள சிகரம்தொடு படத்தில் அவருக்கு கிடைத்துள்ளதாம். இந்த படத்தில் தனது அப்பாவை நினைத்து மகன் விக்ரம்பிரபு பாடுவது போன்று ஒரு பாடல் உள்ளதாம். அன்புள்ள அப்பா -என்று தொடங்கும் அந்த பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியுள்ளாராம்.
இதுபற்றி டி.இமான் கூறுகையில, இந்த படத்தின் மூலம் அப்பாக்களை கெளரவப்படுத்தி ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவு நனவாகியுள்ளது. இந்த பாடலை கேட்ட எனது தந்தை ரொம்ப சந்தோசப்பட்டார். இந்த சந்தோசத்தை அனைத்து அப்பாக்களுக்கும இந்த பாடல் கொடுக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இந்த பாடலை எனது இசையில் ஜேசுதாஸ் அவர்கள் பாடியதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்கிறார் இமான்.