வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கிய வெற்றிமாறன் அதன் பிறகு படங்களை இயக்குவதையே மறந்துபோனார். தற்போது படத்தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். சித்தார்த் நடித்த உதயம் படத்தை அடுத்து தற்போது பொறியாளன் என்ற படத்தை தயாரித்துள்ளார் வெற்றிமாறன். ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆனந்தி அறிமுகமாகிறார். இவர் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்திலும், சற்குனம் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறாராம்.
எஞ்சினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் ஒரு துடிப்பு மிக்க இளைஞன், கட்டுமானப் பணியில் உலக சாதனை படைக்கத் துடிக்கிறார். அவனுக்கு கட்டுமானப்பணியில் எதிரிகளால் நிறைய சிக்கல்கள் ஏற்படுகிறது. அந்த சிக்கல்களை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பதே படத்தின் கதை.
இந்தப் படத்தின் கதைக்கும் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது போல் தெரிகிறதே? என்று வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குநரும், பொறியாளன் படத்தின் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜிடம் கேட்டால்... இந்தப் படத்தின் கதை என்னை வெகுவாக கவர்ந்தது அதனால் நானே இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய முன் வந்தேன். பொறியாளனுக்கும், வேலையில்லா பட்டதாரி படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை! சமூகத்துக்கு ஒரு சின்ன மெசேஜ் சொல்லும் படம் இது. இப்படம் நன்றாக வந்துள்ளது என்றார்.
வெற்றிமாறனிடம் உதவியாளர்களாக இருந்த மணிமாறன் கதை, திரைக்கதை எழுத, தாணுகுமார் இயக்கியுள்ளார். குரங்கு குறும்படம் உள்ளிட்ட பல குறும்படங்களுக்கு இசயைமைத்த எம்.எஸ்.ஜோன்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பொறியாளன் படம் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. ஒரு சின்ன பட்ஜெட்டில் வந்திருக்கும் நல்ல படத்தை தயாரித்ததில் சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார் வெற்றிமாறன்.